தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ரசிகரின் கேள்விக்கு சூசகமாக பதில் கூறிய நடிகை நிதி அகர்வால்
நடிகர் ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்திலும், சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்திலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.
நடிகர் சிம்புவும் இவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் தற்போது லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வதந்திகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் குறித்து எழுதப்படும் விஷயங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு நிதி,
"வதந்திகளில் சில உண்மைகள், சில பொய்கள். மிக முக்கியமானது என்னவென்றால், பெற்றோருக்கு எது உண்மை, எது இல்லை என்று தெரிந்தால் போதும். மக்கள் சொல்வதைப் பொறுத்தவரை, இது ஒரு ஹை-ஸ்கூல் ட்ராமா போன்றது.
இறுதியில், நாம் செய்யும் வேலைதான் எல்லாவற்றையும் விட அதிகமாக பேசுகிறது. அது நடக்கும் வரை காத்திருக்கிறேன்." என்று கூறியிருந்தார்.
இதனால் சிம்புவுக்கும் இவருக்கும் காதல் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
ஆமாவா, இல்லையா என அடித்துக் கூறாமல் பதிலை பூசி மெழுகிறார் நிதி என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.