விஜே பிரியங்காவின் கணவர் இந்தியரே இல்லை; 10 வயது வித்தியாசம் - பின்னணி இதுதான்
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே(32).
பிரியங்கா திருமணம்
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 2016ல் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
இந்நிலையில் வசி என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண நிகழ்வில் மிக நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள்தான் இணையத்தை கலக்கி வருகிறது. வசி சச்சி(42), டிஜே-வாக இருக்கிறார்.
யார் இந்த வசி?
இவர் இந்தியர் இல்லை, இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த, மறைந்த இரா.சம்பத்தின் தங்கை மகன்தான் வசி.
தற்போது இலங்கையில் ஒரு ஈவண்ட் மேனேஜ்மண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இலங்கையில் ஒரு நிகழ்ச்சியின் போது பிரியங்கா அங்கு சென்றதாகவும், அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக உருவானதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் 10வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.