நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை: குடும்பத்தினரின் அறிக்கை
நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை தொடர்பில் அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை
வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீ. 2023ம் ஆண்டு வெளியான இறுகப்பற்று படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான வீடியோவில் உடல் எடை மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளித்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகினர், ஸ்ரீயின் உடல்நிலை குறித்தும் தகவல்கள் காட்டுத்தீயாய் பரவின.
இந்நிலையில் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களின் ஆலோசனைப்படி சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஸ்ரீ யின் உடல் நிலை குறித்து தவறான தகவல்கள் பரவுவது தங்களுக்கு வருத்தத்தை தருவதாகவும், வதந்திகள் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.