பிரபுதேவாவை விட்டுக்கொடுக்கமாட்டேன்; அதெல்லாம் நோ ப்ராப்ளன் - முதல் மனைவி பளீச்
பிரபுதேவா குறித்து அவரது முதல் மனைவி பேசியுள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளது.
பிரபுதேவா
தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலில் க்ரூப் டான்ஸராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் பிரபுதேவா. தொடர்ந்து அவரது நடன திறமை மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.
பின் நடன அமைப்பாளராக பணியாற்ற தொடங்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வலம் வந்தார். திடீரென நடிப்பில் களமிறங்கு காதலன், ஏழையின் சிரிப்பில், டைம், பெண்ணின் மனதை தொட்டு, மிஸ்டர் ரோமியோ, வானத்தை போல, தேவி என எக்கச்சக்க படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தமிழில் அவர் இயக்கிய வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களில் வில்லு திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தன்னுடன் க்ரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவருக்காக ரமலத் ஹிந்து மதத்துக்கும் மாறி, லதா என பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள். அதில், முதல் மகன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில்தான் நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்காக ரமலத்தை விவாகரத்து செய்தார்.
முதல் மனைவி பேட்டி
ஆனால் அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை. அதன்பின், ஹிமானி சிங் என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 1 மகள் உள்ளார். இந்நிலையில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலான் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், எனக்கும் பிரபுதேவாவுக்கும் விவாகரத்து ஆகியிருந்தாலும் பிரச்னை எல்லாம் ஒன்றும் இல்லை.
அவர்தான் இன்றுவரை எனக்கும், குழந்தைகளுக்கும் சப்போர்ட்டாக இருக்கிறார். என்னைப் பற்றி அவர் எப்போதுமே தவறாக பேசியதில்லை. நானும் அவரை விட்டுக்கொடுத்து பேசமாட்டேன். எதுவாக இருந்தாலும் உடனடியாக என்னிடமும் மகன்களிடமும் பேசிவிடுவார்.
சிங்கிள் பேரண்ட்டிங் என்பது கஷ்டம்தான். ஆனாலும் அதை சமாளித்துவிட்டேன். பிரபுதேவாவை பொறுத்தவரை அவர் மகன்களுக்கு மிகச்சிறந்த தகப்பனாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். பிறகு ஏன் நான் அவரைப் பற்றி தவறாக பேச வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.