என் கல்யாண வாழ்க்கையில் இதுதான் பிரச்சனை; குழந்தை பெத்துக்க ஆசை - மனம் திறந்த விஜே பிரியங்கா!

Priyanka Deshpande Star Vijay
By Sumathi Mar 06, 2024 08:35 AM GMT
Report

தனது திருமண வாழ்க்கை குறித்து பிரியங்கா மனம் திறந்துள்ளார்.

விஜே பிரியங்கா

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

vj priyanka

இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விஜே அர்ச்சனா தன்னுடைய யூடியூப் சேனலில் தொடங்கி இருக்கும் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துக்கொண்டார்.

என்னை அடித்து காலி செய்த விஷயம் அப்போதுதான் - அவரோட ரொம்பவும்.. மனம் திறந்த விஜே பிரியங்கா!

என்னை அடித்து காலி செய்த விஷயம் அப்போதுதான் - அவரோட ரொம்பவும்.. மனம் திறந்த விஜே பிரியங்கா!

திருமண வாழ்க்கை

அதில் பேசியுள்ள அவர், என்னையும் யாராவது பயங்கரமா லவ் பண்ணனும், அப்புறம் எனக்கும் குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு. என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் தப்பான முடிவு எடுத்துட்டேன். இனிமேல் என்னுடைய லைஃப்ல எடுக்கப் போற பெரிய முடிவுகளால அம்மாவை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டேன்.

என் கல்யாண வாழ்க்கையில் இதுதான் பிரச்சனை; குழந்தை பெத்துக்க ஆசை - மனம் திறந்த விஜே பிரியங்கா! | Vj Priyanka About Her Married Life Baby

நான் போட்டு வச்சிருக்கிற பிளானை ஒவ்வொரு விஷயத்திலும் நிறைவேற்றிவிட்டு வருகிறேன். ஆரம்பத்தில் நான் பிக்பாஸுக்கு போனும் என்று நினைத்தேன். அதுபோல போய்விட்டேன். கார் வாங்குறது மாடி வீடு கட்டுவது அப்படி ஒவ்வொரு விஷயமா நான் நினைத்ததை செய்து கொண்டு வருகிறேன்.

இப்போ கொஞ்ச நாளா ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி இருக்கிறேன். அதுபோல எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது எனக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.  

You May Like This Video