என்னை அடித்து காலி செய்த விஷயம் அப்போதுதான் - அவரோட ரொம்பவும்.. மனம் திறந்த விஜே பிரியங்கா!

Priyanka Deshpande
By Sumathi Oct 07, 2023 02:30 PM GMT
Report

தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து விஜே பிரியங்கா மனம் திறந்துள்ளார்.

விஜே பிரியங்கா

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா.இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

என்னை அடித்து காலி செய்த விஷயம் அப்போதுதான் - அவரோட ரொம்பவும்.. மனம் திறந்த விஜே பிரியங்கா! | Vj Priyanka About Emotional Side And Divorce

இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் கொஞ்சம் சோகமாக இருந்தால் என்னுடைய தம்பி காலி. என்னுடைய அம்மாவும் காலி.

பர்சனல் பக்கம்

என்னுடைய 11 வயதில் என்னுடைய அப்பா எங்களை விட்டு சென்று விட்டார். நான் பயப்படுகிற ஒரு விஷயம் நெருக்கமாக இருத்தல். அது என்னை உடைத்தும் இருக்கிறது. என்னை உருவாக்கியும் இருக்கிறது.

என்னை அடித்து காலி செய்த விஷயம் அப்போதுதான் - அவரோட ரொம்பவும்.. மனம் திறந்த விஜே பிரியங்கா! | Vj Priyanka About Emotional Side And Divorce

என்னுடைய பெரும் பலமும், பலவீனமும் இப்படி எமோஷனலாக இருப்பதுதான். என்னை அடித்து காலி செய்த எல்லா விஷயங்களும், நான் எமோஷனலாக இருந்த காலக்கட்டம்தான். அண்மையிதான் இதை விட வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். ஒரு விஷயம் உன்னுடையதாக இருந்தால், அது எப்படி என்றாலும், உன்னை வந்து சேரும்.

8 வருஷ கல்யாண வாழ்க்கை - பிரியங்கா விவாகரத்தே செய்யாமல் கணவரை பிரிய இதுதான் காரணம்!

8 வருஷ கல்யாண வாழ்க்கை - பிரியங்கா விவாகரத்தே செய்யாமல் கணவரை பிரிய இதுதான் காரணம்!

அது உன்னிடம் வரவில்லை என்றால், அது உன்னுடையது இல்லை என்று அர்த்தமாகும். ஒருவரை எனக்கு பிடித்து விட்டால், அவருடன் மிகவும் எமோஷனலாக, நெருக்கமாக ஒரு இணைப்பை உருவாக்கிக்கொள்வது என்னுடைய இயல்பு.

அவருக்காக எதை வேண்டுமென்றாலும் செய்வது என்னுடைய இயல்பாக இருந்திருக்கிறது. அதே நேரம் என்னை வேண்டாம் என்று சொல்லி, விலகி நின்றவர்கள் பற்றியும் நான் கவலைப்பட வில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.