பீரியட்ஸ் நேரத்திலும் கோவிலுக்கு போவேன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பளீச்!
தனது பர்சனல் தகவல்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை போல்டாக பகிர்ந்துள்ளார்.
விஜே தீபிகா
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் காதல், திருமணம், சண்டை என அனைத்து காட்சிகளும் ரசிகர்களை ஈர்த்தது.
ஆனால் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா தீடீரென்று மாற்றப்பட்டார். தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடவுள் அப்படித்தான்..
இந்நிலையில், விஜே தீபிகா அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ’பீரியட்ஸ் நேரமாக இருந்தால் கூட நான் கோவிலுக்கு செல்வேன், சாமி கும்பிடுவேன், பூஜை அறைக்கும் செல்வேன், என்னை பொருத்தவரை என்னுடைய கடவுள் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் என்னை ஏற்றுக் கொள்வார்.
என்னை எப்போதும் அவர் ஒதுக்க மாட்டார், கடவுளே ஒதுக்காத போது என்னை ஒதுக்குவதற்கு நீங்கள் யார்? என்ன செய்யக்கூடாது என்று என்னிடம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
அனைத்து நாட்களிலும் நான்வெஜ் சாப்பிடுவேன், நான்வெஜ் சாப்பிட்டு விட்டு கூட நான் கோவிலுக்கு செல்வேன் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.