முத்தம் கொடுத்தால் வாய்ப்பு - அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

Serials Tamil Actress
By Sumathi Apr 02, 2023 05:30 PM GMT
Report

தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமைகள் குறித்து விஜே தீபிகா தகவல் பகிர்ந்துள்ளார்.

விஜே தீபிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது. இத்தொடரில் கண்ணனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ரோலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா மாறி, நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவந்தார்.

முத்தம் கொடுத்தால் வாய்ப்பு - அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! | Pandian Stores Vj Deepika About Casting Couch

தற்போது சாய் காயத்ரி, அதிலிருந்து விலக, மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், தீபிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் ரோல் என சொல்லி ஆடிஷனுக்கு அழைத்தார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட் 

அங்கு போனால் ஒரு ரூமில் ஒரு நபர் தவிர வேறு யாருமே இல்லை. அந்த ரோலுக்கு படத்தில் முத்த காட்சி இருக்கிறது, அதை தற்போது செய்து காட்ட வேண்டும் என கேட்டார். அப்படி ஒரு ரோலில் நடிக்கமாட்டேன் என கூறி, வேறு ரோல் இருந்தால் சொல்லுங்க என கேட்டபோது,

முத்தம் கொடுத்தால் வாய்ப்பு - அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! | Pandian Stores Vj Deepika About Casting Couch

இதற்கு முன் 8 பெண்கள் வந்து கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. உங்களுக்கு மட்டும் கொடுக்க முடியாது எனக் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.