காதலை உறுதிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி - ரசிகர்கள் ஆர்வம்!

Serials Pandian Stores
By Sumathi Jun 22, 2023 08:00 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - ஐஸ்வர்யா காதல் குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பில் உள்ளது.

கண்ணன் - ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் காதல், திருமணம், சண்டை என அனைத்து காட்சிகளும் ரசிகர்களை ஈர்த்தது. ஆனால் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா தீடீரென்று மாற்றப்பட்டார்.

காதலை உறுதிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி - ரசிகர்கள் ஆர்வம்! | Pandian Stores Vj Deepika Saravana Vikram In Love

இதற்கிடையில், சீரியலில் ஜோடியாக நடித்த தீபிகாவும் சரவணவ விக்ரமும் சமூக வலைதளங்களில் ஜோடியாக வலம் வந்த வண்ணம் இருந்தனர். ஆல்பம், குறும்படங்கள், ஃபோட்டோஷூட் என இணையத்தை ஈர்த்தனர்.

காதல்

தற்போது மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மீண்டும் வி.ஜே.தீபிகா கண்ணனின் மனைவியாக கலக்கி வருகிறார். இவர்களின் நெருக்கத்தை பார்த்த ரசிகர்களிடையே காதலிக்கிறார்களா என கேள்வி எழுந்தது.

காதலை உறுதிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி - ரசிகர்கள் ஆர்வம்! | Pandian Stores Vj Deepika Saravana Vikram In Love

இந்நிலையில், தீபிகா சரவண விக்ரமுடன் இருக்கும் படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து, "நாம் ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் டீல் மை டியர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக இருவரும் வெளிப்படையாக இதுவரை அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.