சிவாவோடு அதனால் பேசமாட்டேன்; கடுப்பா இருக்கும்..அது பர்சனல் - மனம் திறந்த வி.ஜே பாவனா

Sivakarthikeyan Bhavana Star Vijay
By Sumathi Mar 08, 2024 02:30 PM GMT
Report

வி.ஜே பாவனா அவரது கெரியர் குறித்த பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார்.

வி.ஜே பாவனா

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானவர் விஜே பாவனா. இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில்,

vj bhavana - sivakarthikeyan

நான் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும்போது மாகாபா சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் போன்றவர்களோடு சேர்ந்து தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். நான் சிவகார்த்திகேயனோடு அதிகமாக பேசமாட்டேன் காரணம் நான் தொகுப்பாளராக இருக்கும்போது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் கண்டஸ்டண்டாக தான் விஜய் டிவியில் இருந்தார்.

ரிலேஷன்ஷிப்பில் இருந்த பாடகி செளந்தர்யா - சிவகார்த்திகேயன் செய்த காரியத்தை பாருங்க!

ரிலேஷன்ஷிப்பில் இருந்த பாடகி செளந்தர்யா - சிவகார்த்திகேயன் செய்த காரியத்தை பாருங்க!

கெரியர் பயணம்

பிறகு அவர் என்னோடு தொகுப்பாளராக மாறி இருந்தார். ஆனாலும் எங்கள் இருவருக்கும் ஒரு டிஸ்டன்ஸ் இருக்கத்தான் செய்தது. நாம் எந்த இடத்தில் வேலை பார்த்தாலும் சரி அங்கே சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நாம என்னதான் பெஸ்ட் ஆக வேலை செய்தாலும் ஆண்களுக்கு தான் அங்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.

சிவாவோடு அதனால் பேசமாட்டேன்; கடுப்பா இருக்கும்..அது பர்சனல் - மனம் திறந்த வி.ஜே பாவனா | Vj Bhavana About Vijay Tv Sivakarthikeyan

நம்மை இரண்டாம் பட்சமாக தான் பார்ப்பார்கள் என்று வேதனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு தன்னை பார்க்கும் பலரும் குழந்தை இன்னும் இல்லையே ஏனென்று கேட்கிறார்கள்.

இந்த வார்த்தையை கேட்கும் போது தான் கடுப்பாக இருக்கும். அது நம்முடைய பர்சனல் அதை ஏன் இவர்கள் கேட்கிறார்கள் என்று சொல்ல தோணும் ஆனாலும் நான் அதை இப்போது கண்டு கொள்வது கிடையாது என்றுத் தெரிவித்துள்ளார்.