அப்போதே சிவகார்த்திகேயன் செய்த செயல்; அதெல்லாம் கிழிக்க வேண்டாம் - கண்டித்த தாய்!

Sivakarthikeyan Tamil Cinema Marriage
By Sumathi Dec 25, 2023 02:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் திருமணம் குறித்து தாய் கூறியதாக சொன்ன தகவல் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக சிறுவர்களை நடிப்பினால் தன் வசப்படுத்திவிட்டார்.

sivakarthikeyan family

மெரினா படத்தில் தொடங்கி மாவீரன் வரை நல்ல வரவேற்பையே பெற்றது. டான் திரைப்படம் வசூலில் வேட்டையாடியது. அதுமுதலே அவரது மார்க்கெட் பெருகியது. இதற்கிடையில், அவருடைய மாமன் மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அடிமை; எங்களையும் விடமாட்டார் - பிரியங்கா மோகன் பளீச்!

அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அடிமை; எங்களையும் விடமாட்டார் - பிரியங்கா மோகன் பளீச்!

தாய் அட்வைஸ்

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய மனைவி, குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில், முன்னதாக நமக்கு இப்போது தான் 21, 22 வயது ஆகிறது. அப்படியே காதலித்து கல்யாணம் பண்ணலாம் என்று இருந்தோம்.

sivakarthikeyan wife arthi

ஆனால், அதெல்லாம் நீ ஒன்னும் பண்ணிக் கிழிக்க வேண்டாம். உன்னுடைய மாமன் பொண்ணையே திருமணம் பண்ணிக்கோ என்று என் அம்மா சொல்லிவிட்டார் என்று நகைச்சுவையாக வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.