அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அடிமை; எங்களையும் விடமாட்டார் - பிரியங்கா மோகன் பளீச்!

Sivakarthikeyan Priyanka Arul Mohan
By Sumathi Oct 25, 2023 05:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் குறித்த ரகசியம் ஒன்றை பிரியங்கா மோகன் பகிர்ந்துள்ளார்.

பிரியங்கா மோகன்

தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து விட்டார்.

actress priyanka mohan

அறிமுகமான ஆரம்ப கால 2 படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்நிலையில், இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் குறித்து ரகசியமான தகவல் ஏதாவது தெரியுமா? எனக் கேட்கப்பட்டது.

திருமணமான இயக்குநருடன் அப்படியொரு உறவா? பிரியங்கா மோகன் குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்!

திருமணமான இயக்குநருடன் அப்படியொரு உறவா? பிரியங்கா மோகன் குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்!

சிவா குறித்த ரகசியம்

அதற்கு பதிலளித்த அவர், சிவகார்த்திகேயன் பற்றி அனைவருக்கும் தெரியும். அவருக்கு இனிப்பு என்றால் அவ்வளவு பிடிக்கும். இனிப்பு சாப்பிடுவதற்கு அவர் அடிமையாகி விட்டார்.

அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அடிமை; எங்களையும் விடமாட்டார் - பிரியங்கா மோகன் பளீச்! | Priyanka Mohan About Sivakarthikeyan Habits

படப்பிடிப்பு தளங்களில் தினமும் ஏதேனும் ஒரு இனிப்பை சாப்பிட்டு கொண்டு இருப்பார். சாப்பிட சொல்லி எங்களையும் கெடுப்பார். என்ன காரணம் என்று தெரியவில்லை. பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.