செட்டில் பார்த்ததும் விஜய் என்னிடம் அதைப்பற்றி சொன்னார்; எனக்கு அப்படி இருந்தது - பிரியங்கா மோகன்!

Vijay Priyanka Arul Mohan Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Sep 20, 2023 03:30 PM GMT
Report

நடிகை பிரியங்கா மோகன் படப்பிடிப்புத்தளத்தில் விஜய்யை சந்தித்தது பற்றி பேசியுள்ளார். 

பிரியங்கா மோகன்

இயக்குநர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான 'ஒந்த் கதே ஹெல்லா' என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு திரைப்படமான 'கேங் லீடர்' என்ற திரைப்படத்தில் நடித்தார்.

செட்டில் பார்த்ததும் விஜய் என்னிடம் அதைப்பற்றி சொன்னார்; எனக்கு அப்படி இருந்தது - பிரியங்கா மோகன்! | Actress Priyanka Mohan About Sctor Vijay

இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாத்தின் மூலம் தென்னிந்தியா ரசிகர்களை ஈர்த்தார் ப்ரியங்கா மோகன். இதனையடுத்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான' டாக்டர்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரியங்கா.

தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் பிரியங்கா. அப்போது அவரிடம் "உங்கள் பெர்போமன்ஸை பார்த்து நடிகர் விஜய் என்ன சொன்னார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

பேட்டி

அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன் "விஜய் என்னிடம் "டாக்டர் படத்தில் ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க"என்று சொன்னார். மேலும் என்னுடைய தெலுங்கு படத்திலுள்ள "ஹே அப்பாயி" என்ற பாடலில் நன்றாக டான்ஸ் ஆடியிருந்தீங்க என்று சொன்னார்.

செட்டில் பார்த்ததும் விஜய் என்னிடம் அதைப்பற்றி சொன்னார்; எனக்கு அப்படி இருந்தது - பிரியங்கா மோகன்! | Actress Priyanka Mohan About Sctor Vijay

அப்போது நான் அவரிடம் "சார் நீங்க அதெல்லாம் பார்ப்பீர்களா? என்று கேட்டேன். அதற்கு விஜய் "நான் எல்லாமே பார்ப்பேன்" என சொல்லி விஜய் என்னை பாராட்டினார். அவர் எவ்வளவு பெரிய ஹீரோ, எவ்வளவு பெரிய ஸ்டார்.

செட்டில் பார்த்ததும் விஜய் என்னிடம் அதைப்பற்றி சொன்னார்; எனக்கு அப்படி இருந்தது - பிரியங்கா மோகன்! | Actress Priyanka Mohan About Sctor Vijay

நான் இப்போதுதான் சினிமாக்கு வந்திருக்கிறேன். என்னுடைய படங்களையெல்லாம் அவர் பார்ப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது" என்று பிரியங்கா மோகன் பேசியுள்ளார்.