ரிலேஷன்ஷிப்பில் இருந்த பாடகி செளந்தர்யா - சிவகார்த்திகேயன் செய்த காரியத்தை பாருங்க!
சிவகார்த்திகேயன் குறித்த தகவல்களை பின்னணி பாடகி செளந்தர்யா பகிர்ந்துள்ளார்.
செளந்தர்யா
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

தற்போது ஆக்ஷன் ஹீரோவாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ள அவர், எஸ்கே 21 படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் நிலையில் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.
சுவாரஸ்ய தகவல்
இதற்கிடையில், அயலான் படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த பட புரோமஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து, அவருடன் பணியாற்றியது பழகியது குறித்து பல பிரபலங்கள் தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், விஜய் டிவி பிரபலமும் பாடகியுமான செளந்தர்யா, என்னை எப்படிலாம் மாட்டிவிட்டிருக்கிறார். நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சிவகார்த்திகேயனுக்கு தெரியும். ஒருமுறை எனக்கும் என் பாய் ஃபிரண்டுக்கும் சண்டை. சூப்பர் சிங்கர் குழுவில் இருந்து எனக்கு கால் செய்திருக்கிறார்கள், அப்போது எனக்கு இரண்டாம் கால் போய்க் கொண்டிருந்தது.
இதை எப்படியோ சிவகார்த்திகேயனுக்கு தெரிந்துவிட்டது. அதை அப்படியே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், என்ன செளந்தர்யா உங்களுக்கு கால் செய்தால் செகண்ட் கால் போகுதாம், யார்கிட்ட பேசுனீங்க, என்று கேட்டுவிட்டார்.
என் வீட்டுக்கெல்லாம் தெரியாது, இதை கட் செய்து விடுங்கள் என்று காலில் விழுந்து கேட்டுக்கொண்டதாக செளந்தர்யா கூறியிருக்கிறார். பின் அவரிடம் எதையும் ஷேர் பண்ணவேக்கூடாது என்று இருந்துவிட்டேன்”. எனத் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசு மீது துப்பாக்கிச் சூடு! பண்ணையாளர்கள் அச்சம் IBC Tamil