சிவா..அவ்ளோ ஈசியா என் இடத்த குடுக்க மாட்டேன்; இமானுக்கு வாழ்த்துக்கள் - நடிகர் தனுஷ்!

Dhanush Sivakarthikeyan Tamil Cinema D Imman Tamil Actors
By Jiyath Oct 19, 2023 01:00 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயனின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை பதிவிட்டு இணையவாசிகள், சிவகார்த்திகேயனை தாக்கி வருகின்றனர்.

டி இமான்-சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சிவா..அவ்ளோ ஈசியா என் இடத்த குடுக்க மாட்டேன்; இமானுக்கு வாழ்த்துக்கள் - நடிகர் தனுஷ்! | Fans Attack Sivakarthikeyan On D Imman Issue

இதனைய‌டுத்து,  தனது முதல் மனைவி மோனிகாவை, இமான் விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையவாசிகளும், ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் சிவகார்த்திகேயனை விளாசி வந்தனர்.

இந்த‌ ச‌ர்ச்சைக்கு ம‌த்தியில் உடனடியாக பேட்டியளித்த இமானின் முதல் மனைவி மோனிகா 'சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதன், நானும் இமானும் பிரியக்கூடாது என்றுதான் அவர் நினைத்தார்" என்று தெரிவித்தார்.

எல்லாருக்கும் நான் வேணும்; ஆனா விஜய்யுடன் மட்டும் தான்.. நடிகை மீனா ஓபன் டாக்!

எல்லாருக்கும் நான் வேணும்; ஆனா விஜய்யுடன் மட்டும் தான்.. நடிகை மீனா ஓபன் டாக்!

தாக்கும் இணையவாசிகள்

இந்நிலையில் டி இமான் இசையமைப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

சிவா..அவ்ளோ ஈசியா என் இடத்த குடுக்க மாட்டேன்; இமானுக்கு வாழ்த்துக்கள் - நடிகர் தனுஷ்! | Fans Attack Sivakarthikeyan On D Imman Issue

அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது "சிவா அவ்வளவு ஈசியா என் இடத்தை கொடுக்க மாட்டேன். நான் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இன்னொரு 10 வருஷம் கழித்து எடுத்துக்கங்க. இப்போ எனக்கு வேணும். இமானுக்கு வாழ்த்துக்கள்" என்று தனுஷ் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை இப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அதனை டி இமான்-சிவகார்த்திகேயன் விவகாரத்தில் தொடர்புபடுத்தி இணையவாசிகள் அவரை, தாக்கியும், கலாய்த்தும் வருகின்றனர்.    

இதனால்தான் அஜித்தை வேண்டாம் என்று விஜய்யை செலக்ட் செய்தேன் - சங்கீதா ஓபன் டாக்!

இதனால்தான் அஜித்தை வேண்டாம் என்று விஜய்யை செலக்ட் செய்தேன் - சங்கீதா ஓபன் டாக்!

You May Like This Video