இதனால்தான் அஜித்தை வேண்டாம் என்று விஜய்யை செலக்ட் செய்தேன் - சங்கீதா ஓபன் டாக்!
அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது குறித்து நடிகை சங்கீதா பேசியுள்ளார்.
நடிகை சங்கீதா
'என் ரத்தத்தின் ரத்தமே' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து இதயவாசல், கேப்டன் மகள், மகாநதி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் 'பூவே உனக்காக' என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தார்.
அதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படத்தில் இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது. தமிழ் மலையாளம், கன்னடம் என் மூன்று மொழியிலும் சங்கீத நடித்துள்ளார்.
50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சங்கீத.
பேட்டி
அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு சங்கீத பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது குறித்து அவர் பேசியுள்ளார். சங்கீதா பேசியதாவது "பூவே உனக்காக திரைப்படம் பெரிய அளவில் எனக்கு வெற்றியை கொடுத்தது.
இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு வரும்போது அஜித் நடிப்பில் வெளியான 'காதல் கோட்டை' திரைப்படத்திலும் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இரண்டும் ஒரே நேரத்தில் வந்ததால் எனக்கு எதை செலக்ட் செய்வது என்பது முதலில் குழப்பமாக இருந்தது.
ஆனாலும் நான் இயக்குநர் விக்ரமனுக்காக. பூவே உனக்காக திரைப்படத்தை செலக்ட் செய்தேன். ஆனால் காதல் கோட்டை படத்திலும் நான் நடிக்கவில்லையே என்பது எனக்கு வருத்தம் தான்" என்று பேசியுள்ளார்.