அந்த பிரபல நடிகர் என்னை அப்படி கூப்பிட்டார்; நானும் சிலரை கூப்பிட்டேன் - நடிகை சங்கீதா வேதனை!

Sangeetha Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath Oct 15, 2023 03:30 PM GMT
Report

நடிகை சங்கீதா தன்னை ஆண்டி என்று மற்றவர்கள் அழைப்பது குறித்து பேசியுள்ளார். 

நடிகை சங்கீதா

என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து இதயவாசல், கேப்டன் மகள், மகாநதி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அந்த பிரபல நடிகர் என்னை அப்படி கூப்பிட்டார்; நானும் சிலரை கூப்பிட்டேன் - நடிகை சங்கீதா வேதனை! | Actress Sangeetha About People Calling Her Aunty

பின்னர் 'பூவே உனக்காக' என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தார். அதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படத்தில் இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது. தமிழ் மலையாளம், கன்னடம் என் மூன்று மொழியிலும் சங்கீத நடித்துள்ளார் .

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது மீண்டும் மலையாள படங்களில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சங்கீத. அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தன்னை ஆண்டி என்று அழைப்பது குறித்து பேசியுள்ளார்.

பேட்டி

சங்கீதா பேசியதாவது "என்னோட குழந்தையின் வயதில் இருக்கும் யார் என்னை ஆண்டி என்று சொன்னாலும் ஒருமாதிரியும் இருக்காது. ரொம்ப பெரியவங்க யாரவது அப்படி கூப்பிட்டால்தான் அப்படி இருக்கும்.

அந்த பிரபல நடிகர் என்னை அப்படி கூப்பிட்டார்; நானும் சிலரை கூப்பிட்டேன் - நடிகை சங்கீதா வேதனை! | Actress Sangeetha About People Calling Her Aunty

எனக்கு கல்யாணம் ஆன புதிதில், அப்போது என்னுடைய கணவர் ஒரு தெலுங்கு படம் பண்ணிக்கொண்டிருந்தார். என்னோட 1 வயசு குழந்தை அப்பாவை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதற்காக நான் குழந்தையுடன் தெலுங்கு இயக்குநர் மோகன் பாபுவின் செட்டிற்கு சென்றேன். அந்த படத்தில் மோகன் பாபுவின் மகன் கதாநாயகனாகப் நடித்துக்கொண்டிருந்தார். அவரின் மகன் வந்து என்னை ஆண்டி என்று அழைத்தார்.

அப்போது எனக்கு ஷாக் ஆச்சு. அப்போது அதெல்லாம் நம்மால் மற்ற முடியாது என்று நினைத்தேன் . நான் யோசித்து பார்த்தேன், நான் சினிமாவில் நடிக்கும்போது சிலரை ஆண்டி என்று அழைத்திருக்கிறேன். அவர்கள் எவ்வளவு வேதனையடைந்திருப்பார்கள் என்று தெரியவில்லையே? என்று சங்கீத பேசியுள்ளார்.