சாராவோட ஆளு இவன்தானு ஃபோட்டோ பார்த்தேன்; அவ்வளவு கோபம் - விஜே அர்ச்சனா வேதனை!
விஜே அர்ச்சனா தனது மகள் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜே அர்ச்சனா
பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. பல்வேறு சேனல்களில் பணியாற்றியுள்ளார். இவரது மகள் சாரா. இவரும் தாயுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா கலந்துக்கொண்டார். சாரா இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அம்மா மற்றும் சித்தியோடு இவர் போடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். இந்நிலையில், அர்ச்சனா அளித்த பேட்டி ஒன்றில் எனக்கும் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.
மகள் குறித்து வேதனை
சாரா போன வாரத்தில் அவருடைய நண்பர்களோடு புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் சாராவும் இன்னொரு பெண்ணும் அதுபோல இரண்டு ஆண்களும் இருந்திருக்கிறார்கள். நான்கு பேரும் போட்டோ எடுத்திருக்கிறார்கள். அதை ஒரு பையன் சாரா மற்றும் இன்னொரு பையனையும் கிராப் பண்ணி இன்ஸ்டாகிராமில் இவனோட ஆளு இவ தான் என்று சாராவை மென்ஷன் பண்ணி இருக்கிறார்.
அந்த போட்டோவை பார்த்ததும் நான் சாராவிடம் என்னவென்று கேட்டேன் அதற்கு சாரா இந்த பாருங்கம்மா நாங்க நாலுபேரும் எடுத்த போட்டோ என்று சொன்னார். அந்த போட்டோவை சாரா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடவில்லை. ஆனால் அதை எப்படியோ இன்னொரு மாணவனுக்கு போய் அந்த மாணவன் அதை கிராப் பண்ணி இன்னொரு பையனையும் சேர்த்து போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அம்மா மேல தப்பே இல்ல; விரிசல் உண்மைதான் இன்னும் எவ்வளவு நாள்தான் பேசுவீங்க - கொந்தளித்த அர்ச்சனா மகள்!
அதை பார்த்ததும் எனக்கு டக் என்று கோபம் வந்துவிட்டது. நான் சாராவை பற்றி மட்டும் யோசிக்கவில்லை. சாராவோடு இருக்கும் அந்த பையனைப் பற்றியும் யோசித்து தான் கோபப்பட்டேன். காரணம் அந்த பையனின் பெற்றோர் இந்த புகைப்படத்தை பார்த்தால் இதற்கு தான் இந்த மாதிரி மீடியாவில் இருக்கிற பெண்ணோடு நீ பேசக்கூடாதுன்னு சொன்னோம் என்று சொல்வார்கள்.
பிறகு எங்கேயாவது வெளியே போறோம் என்று சொன்னால் கூட அவர்கள் சாராவோடுதான் இவன் போறானா இருக்குமோ என்று யோசிப்பார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.