அம்மா மேல தப்பே இல்ல; விரிசல் உண்மைதான் இன்னும் எவ்வளவு நாள்தான் பேசுவீங்க - கொந்தளித்த அர்ச்சனா மகள்!
விஜே அர்ச்சனாவின் மகள் கோபமாக பகிர்ந்த பதிவு கவனம் பெற்றுள்ளது.
விஜே அர்ச்சனா
பல்வேறு சேனல்களில் பணியாற்றியவர் விஜே அர்ச்சனா. இவரது மகள் சாராவும் தாயுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இருவரும் சேர்ந்து தங்களது யூடியூப் சேனலுக்கு அதிக வீடியோக்களை செய்துள்ளனர்.
அதில் வரும் விமர்சனங்களுக்கு சாரா அவ்வப்போது பதிலடி கொடுப்பார். அந்த வகையில், அவர் என்னுடைய முதிர்ச்சி குறித்து ஏன் இன்னமும் விவாதங்கள் நடத்தப்படுகின்றன? எங்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்துங்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட எனது நேர்காணலை ஒரு முன்னணி டிஜிட்டல் மீடியா மீண்டும் ஒளிபரப்பியுள்ளது.
அதில் ஒரு ரீல்ஸின் தலைப்பு என்ன தெரியுமா, சாராக்கு இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியா என கேட்டுள்ளார். ஆனால் என்னை பலர் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் என்னை அவதூறாக பேசி வருகிறார்கள். எனது வாழ்வில் பல்வேறு தருணங்களில் மெச்சூரிட்டிக்கு நேரடி தொடர்பு உண்டு. எனக்கு 8 வயதாக இருந்த போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது.
சாடிய சாரா
நான் 11 ஆண்டுகள் என் தந்தையை விட்டு பிரிந்திருந்தேன். எனது தாய், தந்தைக்கு இடையே நடந்த பிரச்சினைகளை பார்த்துள்ளேன். என் தாய் மீது எந்த தவறுமே இல்லாத போது அவருக்கும் என் தந்தைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. என் தாய்க்கு சர்ஜரி நடந்தது. அவர் மீண்டும் இயல்பு நிலை திரும்ப நான் அவருக்கு பக்கப்பலமாக இருந்தேன்.
இப்படி நிறைய கஷ்டங்களை பார்த்து வளர்ந்த என்னை பல்வேறு சமூகவலைதளங்களில் பலர் பல்வேறு விதமான கருத்துகளை நியாயப்படுத்துவதற்கு நன்றிகள். நான் பிரபலமாக இருப்பதால் பொதுமக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளேன் என்பது எனக்கு நன்கு புரிகிறது. என் மீது அவதூறுகளை அள்ளிவீசிவிட்டு செல்வது என்பது எளிதான காரியம்.
ஆனால் இந்த மாதிரி மோசமான பதிவுகள் எல்லாம் என்னையும் என் குடும்பத்தையும் எப்படி காயப்படுத்துகிறது என்பது ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி உங்கள் அன்புக்கும் வெறுப்புக்கும் நான் கடமைப்பட்டவள். அன்புக்கு நன்றி, வெறுப்புணர்விலிருந்து விரைவில் சரியாகிவிடுவீர்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.