அந்த ஆடையை அணிய சொல்லி அட்வைஸ் பண்ன நெட்டிசன் - கடுப்பான அர்ச்சனா!
அர்ச்சனா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
விஜே அர்ச்சனா
தொகுப்பாளினியாக களமிறங்கியவர் விஜே அர்ச்சனா. தொடர்ந்து, ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே சமீபத்தில் அர்ச்சனா, வராகி அம்மனை வீட்டில் வழிபாடு செய்தார்.
அப்போது அவர் சுடிதார் அணிந்து பூஜை செய்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், "எத்தனை சந்தர்ப்பங்களில் நல்லா சேலை கட்டி, ஆக்சஸரீஸ் அணிந்து ரெடி ஆறீங்க. ப்ரோமோஷன்ஸ் கூட அப்படி பாரம்பரியமாக ரெடி பண்ணிக்கறீங்க.
தக்க பதிலடி
பூஜை செய்யும் போது பொட்டு வெச்சி சேலை கட்டி கையில் வளையல் போட்டு இருக்கலாமே” என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அர்ச்சனா, ”கடவுள் முன்பு நீங்கள் எப்போதும் போல இருக்கலாம். அவரைக் கவர வேண்டிய அவசியம் இல்லை. நாம் நாமாகவே இருக்கலாம்.
புடவை கட்டுவதும், கட்டாம இருப்பதும் என் விருப்பம். கருத்து சொல்றது உங்க விருப்பம். இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் அம்மனின் ஆசிர்வாதத்தை கொடுக்கவே பதிவு செய்தேன்.
உங்களுக்கு எப்போதும் வாராகி அம்மனின் ஆசீர்வாதம் இருக்கட்டும் “ எனக் கூறியுள்ளார்.