கணவருடன் விஜே அர்ச்சனா விவாகரத்து? - நிகழ்ச்சியில் கதறி அழுத பரிதாபம்
கணவருடன் விவகாரத்து ஏற்பட்டுவிட்டதாக விஜே அர்ச்சனா நிகழ்ச்சி ஒன்றில் கூறி கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணம்
பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கினார் விஜே அர்ச்சனா. அதன் பின் ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, மூவி புரமோஷன் ஷோ, ஸ்பெஷல் ஷோ, செலிபிரிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா என்ற 16 வயதில் மகள் உள்ளார்.
கணவருடன் விவாகரத்து
கடந்த சில வருடங்களாக ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் அவரது மகள் சாராவும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலம் அடைந்துவிட்டார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தில், பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அர்ச்சனா நானும் என் கணவரும் ஒரு மாதத்திற்கு முன்னர் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிக்கொண்டோம் என கூறி கதறி அழுதார்.
இந்த நிலையில் தனது மகள் சாரா எங்கள் இருவரையும் உட்கார வைத்து பேச வைத்தால் நான் எனது கணவர் வினீத்தை காதலித்து வருகிறேன்.
நான் மாதத்திற்கு ஒரு முறை அவரிடம் விவாகரத்து கேட்பேன் என்றார். மேலும் நாங்கள் 15 நாட்களாக காதலித்து வருகிறோம் என்றார்.