நடிகர் விஜய்யை அடுத்து அரசியலில் களமிறங்கும் விஷால் - வெளியான தகவல்!

Vijay Vishal Tamil nadu
By Sumathi Feb 06, 2024 05:15 AM GMT
Report

நடிகர் விஷால் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

vijay with vishal

மேலும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த நிலையில், தற்போது கட்சி தொடங்க தயாராகி உள்ளார்.

இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி!

இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி!

தேர்தலில் போட்டி?

முன்னதாக, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பி, அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

actor vishal

பூத் கமிட்டிகளை உருவாக்கி, வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்கையில் அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நாடளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் எனவும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.