இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி!

Vishal Narendra Modi
By Sumathi Sep 30, 2023 10:53 AM GMT
Report

 உரிய நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சமாக பெற்றதாக நடிகர் விஷால் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி! | Actor Vishal Thanks To Pm Modi Movie Issue

கடைசி நேரத்தில் வேறு வழியில்லை என்பதால் இரண்டு தவணையாக ரூ.6.5 லட்சத்தை கொடுத்தோம் என்றும், அதன்பிறகு தான் மார்க் ஆண்டனி இந்தியில் வெளியானது என வீடியோ வெளியிட்டு இருந்தார்.

விஷால் நன்றி

மேலும், இந்த விவகாரத்தை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' ஹிந்தி பட வெளியீட்டிற்கு தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடர்பான புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி.

இந்த நடவடிக்கை, தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்; ரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மிக்க நன்றி. ம்புகிறேன்; என் பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மிக்க நன்றி.

ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது, என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது, ஜெய் ஹிந்த் எனக் குறிப்பிட்டுள்ளார்.