Tuesday, May 6, 2025

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் - உறுதிசெய்த நடிகர் விஷால்!

Vishal Lakshmi Menon Marriage
By Sumathi 2 years ago
Report

திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது வரை சிங்கிளாக இருப்பதால் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் - உறுதிசெய்த நடிகர் விஷால்! | Vishal Clarifies Marriage With Lakshmi Menon

அந்த வரிசையில், நடிகை லட்சுமி மேனனுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் இவர்கள் கெமிஸ்ட்ரி பக்கவாக இருந்ததால், இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.

திருமணம் 

மேலும் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில், இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன்.

விளக்கம்

ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடனான எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது. நடிகை என்பதை தாண்டி முதலில் அவர் ஒரு பெண்,

நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து, அடையாளத்தை கெடுக்கிறீர்கள். மேலும் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை காலமும், நேரமும் கணிக்க முடியாது. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.