லட்சுமி மேனன் கெரியரையே காலி செய்த விஷால் - பரிதாப நிலையில் நடிகை!
பிரபல நடிகை லட்சுமி மேனனுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததற்கு காரணம் விஷால் என்று சர்ச்சை எழுந்துள்ளது.
விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், முதல் படமே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.
இவர் நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ளார், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பிடிவாதமாக இருந்து வருகிறார்.
நடிகர் விஷால் சிங்கிளாக இருப்பதால், அவருடன் நடிக்கும் நடிகைகள் எளிதில் கிசுகிசுவில் சிக்கி விடுகின்றனர்.
லட்சுமி மேனன் சர்ச்சை
இந்நிலையில், தமிழ் சினிமாவின் இளம் நடிகையான லட்சுமி மேனன் தமிழில் விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. இந்த படத்தில் இவர்களின் கெமிஸ்டிரி பக்கவாக இருந்ததால், இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.
மேலும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து இவரது மார்க்கெட் படி படியாக குறைந்து வந்தது.
தற்பொழுது எந்த வாய்ப்பும் இன்றி பரிதாப நிலையில் உள்ளார். அதனால் தற்பொழுது இவரது சினிமா வாய்ப்பு குறைந்ததற்கு காரணம் விஷாலுடனான சர்ச்சையால் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.