2வது மனைவியுடன் விவாகரத்து? துரோகம்.. ஏமாற்றம் - வேதனை பகிர்ந்த விஷ்ணு விஷால்

Vishnu Vishal Tamil Cinema Marriage Divorce
By Sumathi Mar 25, 2023 06:02 AM GMT
Report

போன முறை அது தோல்வி அல்ல. என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றம் என நடிகர் விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2018ம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது.

2வது மனைவியுடன் விவாகரத்து? துரோகம்.. ஏமாற்றம் - வேதனை பகிர்ந்த விஷ்ணு விஷால் | Vishnu Vishal Tweet Made Fans To Confuse Divorce

நடிகர் விஷ்ணு விஷால், ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்த பிறகு, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தில் ஆர்யன் என்ற மகன் உள்ளார்.

விவாகரத்து?

சில மாதங்களுக்கு முன்பு, படுக்கையில் இருந்தபடி நிர்வாண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ‘கட்ட குஸ்தி’ நல்ல வரவேற்பை பெற்றது.

2வது மனைவியுடன் விவாகரத்து? துரோகம்.. ஏமாற்றம் - வேதனை பகிர்ந்த விஷ்ணு விஷால் | Vishnu Vishal Tweet Made Fans To Confuse Divorce

இந்நிலையில், “பரவாயில்லை, நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்று விட்டேன், மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை அது தோல்வி அல்ல. என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றம்" எனப் பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவரது 2வது திருமணம் குறித்த தகவலா என குழப்பமடைந்துள்ளனர்.