ரொம்ப சீன் போடுறாரு.. பார்த்தாலே எரிச்சலாகுது... - பிரபல கிரிக்கெட் வீரரை விமர்சனம் செய்த விஷ்ணு விஷால்...!
ரொம்ப சீன் போடுறாரு, பார்த்தலே எரிச்சலாகுது என்று இந்திய பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை நடிகர் விஷ்ணு விஷால் விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
கடந்த 2018ம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ‘ராட்சசன்’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் இவருடைய கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
சமீபத்தில் வெளியான ‘கட்டாகுஸ்தி’ படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது. குறிப்பிட்டு சொல்லப்போனால் விஷ்ணுவிஷாலின் சினிமா கெரியரில் இந்த படம் தான் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்ற படமாக மாறியது.
நடிகர் விஷ்ணு விஷால், ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்த பிறகு, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு, படுக்கையில் இருந்தபடி நிர்வாண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஓவர் சீன் போடுறாரு...
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளது. சினிமா பிரபலங்கள் நடத்திய கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டு நல்ல ஸ்கோரை கைப்பற்றி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இந்நிலையில், இவர் ஒரு பேட்டியில் பேசுகையில், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஒருவரை விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஹர்த்திக் பாண்டியா மைதானத்தில் ஓவர் சீன் போடுறாரு. அவரை பார்க்கும்போது, வேண்டுமென்றே வெறுப்பேத்துகிற மாதிரி பாடியை காட்டுகிறார். அதை பாத்தாலே ரொம்ப எரிச்சலாகிறது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.