காதல் கிசுகிசு; வரலட்சுமி நிச்சயதார்த்தம் - மனம் திறந்த விஷால்!

Vishal Varalaxmi Sarathkumar Tamil Cinema
By Sumathi Apr 15, 2024 09:00 AM GMT
Report

வரலட்சுமி நிச்சயதார்த்தம் குறித்து நடிகர் விஷால் மனம் திறந்துள்ளார்.

வரலட்சுமி நிச்சயதார்த்தம்

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

varalakshmi sarathkumar - vishal

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழில் அதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதற்கிடையில், வரலெட்சுமியும் நடிகர் விஷாலும் காதலில் இருப்பதாகவும், வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கல.. சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது - ஏன்? வரலட்சுமி ஓபன் டாக்

சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கல.. சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது - ஏன்? வரலட்சுமி ஓபன் டாக்

விஷால் பேட்டி

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஷால், “வரலட்சுமியை நினைத்து நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன். அவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் அமைந்திருக்கிறது. திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாபாத்திரத்துக்கு பிறகு ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் கேரக்டரை மெய் சிலிர்த்து பார்த்தேன். சிறப்பாக நடித்திருந்தார்.

காதல் கிசுகிசு; வரலட்சுமி நிச்சயதார்த்தம் - மனம் திறந்த விஷால்! | Vishal About Varalaxmi Encagement And Career

உண்மையில் அவரை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அவருடைய கரியரை தாண்டி அடுத்த லெவலுக்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.