2வது மனைவியாகும் வரலட்சுமி; ஏற்கனவே திருமணம், 15 வயதில் மகள் - யார் இந்த நிக்கோலய்?
வரலட்சுமியின் வருங்கால கணவர் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரலட்சுமி சரத்குமார்
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக நட்பாக பழகி, 3 வருடமாக டேட்டிங் செய்துள்ளனர். நிக்கோலய் மும்பையில் பிரபல தொழிலதிபராக வலம் வருகிறார்.
யார் இந்த நிக்கோலய்?
இவர் கலைப் பொருட்கள், கலை வடிவங்களை காட்சிப்படுத்தும் ஆர்ட் கேலரிஸ்ட் எனும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில், வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மகள் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று இருப்பதாக கூறப்படுகிறது. முதல் மனைவி கவிதா Mrs Gladrags 2010 என்ற பட்டத்தை வென்றுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.