சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கல.. சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது - ஏன்? வரலட்சுமி ஓபன் டாக்
நடிகர் வரலட்சுமி, சரத்குமார் குறித்த தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் வரலட்சுமி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஷங்கரின் பாய்ஸ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஓபன் டாக்
அதனை மிஸ் செய்தேன். தன்னுடைய தந்தைக்கு தான் நடிப்பதில் விருப்பம் இல்லை. தான் முன்னதாகவே சினிமாத்துறைக்கு வந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு விளக்கமளித்துள்ள சரத்குமார், வரலட்சுமி நடிக்க வருவது தனக்கு பிடிக்கவில்லை.
தன்னை மீறிதான் அவர் தற்போது நடித்து வருகிறார். ஒரு படத்திலாவது நடிக்கட்டும் என்று தன்னுடைய முதல் மனைவியும் ராதிகாவும் வந்து வற்புறுத்தியதால் தான் நடிக்க சம்மதித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.