ராதிகாலாம் எனக்கு அம்மா கிடையாது... அவங்க எனக்கு ஆண்டி... - பட்டென பேசிய வரலட்சுமி - ஷாக்கான ரசிகர்கள்

Sarathkumar Raadhika Varalaxmi Sarathkumar
By Nandhini Jun 21, 2022 10:41 AM GMT
Report

1980ம் ஆண்டு முதல் 1995-ம் காலகட்டங்களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்து பிரபலமானவர்.

ராதிகா - சரத்குமார் 

ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரை கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இராகுல் என்ற மகன் 2004ம் ஆண்டு பிறந்தார்.

வரலட்சுமி 

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

ராதிகாலாம் எனக்கு அம்மா கிடையாது... அவங்க எனக்கு ஆண்டி... - பட்டென பேசிய வரலட்சுமி - ஷாக்கான ரசிகர்கள் | Raadhika Sarathkumar Varalaxmi Sarathkumar

அம்மானுலாம் கூப்பிட முடியாது

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் நடிகை ராதிகா குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், “சிலர் என்னிடம் வந்து ஏன் நீங்கள் ராதிகாவை அம்மானு கூப்பிடமாட்றீங்க. ஆண்ட்டினு கூப்பிடுறிங்கன்னு கேட்குறாங்க. நான் எதுக்கு ராதிகாவை அம்மானு கூப்பிடனும். அவங்க என் அப்பாவோட 2வது மனைவி. அவ்ளோ தான். ஆனால், நான் ராதிகா மீது கோபத்தில் உள்ளதாகவும், அவரை எனக்கு பிடிக்காது என்று பலர் தவறாக கூறி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.

எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு உள்ளது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்கிறோம். அதனால் அவரை அம்மானு எப்படி கூப்பிட முடியும். என்னை பெற்றெடுத்த அம்மாவைதான் நான் அம்மான்னு கூப்பிட முடியும். அவர் தான் எனக்கு அம்மாவாக இருக்க முடியும்.

வேலையில்லாத வெட்டி பசங்க எதையாச்சு சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா என்று நச்சுன்னு பதிலளித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.