ஒழுங்கா இருக்கணும்.. வேற மாதிரி ஆயிடும் - எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை
விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது.
மக்கள் போராட்டம்
விருதுநகர், சின்னக்காமன்பட்டியில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த வைரமணி, மகாலிங்கம், புண்ணியமூர்த்தி ஆகியோரின் உறவினர்கள் உடல்களை பெற்றுக்கொண்ட நிலையில், மீதமுள்ள 5 பேரின் உடலை உறவினர்கள் பெற்று கொள்ளவில்லை.
எஸ்பி மிரட்டல்
அவர்கள் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை உயர்த்தி வழங்க வேண்டும், ஆலை நிர்வாகம் 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என உடல்களை பெற்றுக்கொள்ளாமல் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி.கண்ணன், “ஒழுங்கா இருக்கணும், இதற்கு மேல் கோஷம் எழுபினால் வேற மாதிரி ஆயிடும், ஒழுங்கா இருக்கணும்” என மிரட்டும் தொணியில் சர்ச்சைக்குரிய வகையில் எச்சரித்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள், எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று ஆவேசம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.