அஜித்குமார் மரணம்: முதல்வர் பேசியது அலட்சியத்தின் உச்சம் - அதிமுக - பாஜக ஆர்ப்பாட்டம்
அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
அஜித்குமார் மரணம்
சிவகங்கை, திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தற்காலிக ஊழியராக அஜித்குமார்(27) பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) , அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதனையடுத்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத்தை சென்னை டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த சந்தீஷுக்கு, சிவகங்கை மாவட்ட எஸ்பி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக - பாஜக இணைந்து அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த உள்ளது.