அஜித் குமார் மீது புகாரளித்த பெண் யார்? விசாரணை ஏன் இல்லை - வைரலாகும் CCTV காட்சி
அஜித் குமார் மீது புகார் தந்த அந்த பெண் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகிறது.
அஜித் குமார் உயிரிழப்பு
சிவகங்கை, திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தற்காலிக ஊழியராக அஜித்குமார்(27) பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) , அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்தார்.
தொடர்ந்து கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புகாரளித்த பெண் யார்?
அஜித் குமார் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ காட்சியை எடுத்தவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார் வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது? யார் அங்கு இருந்தனர்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பு, அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று கூறியது.
இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருபுவனம் அஜித்குமார் வழக்கில் நகை காணாமல் போனதாகஸபுகார் அளித்த பெண்மனி மற்றும் அவரது பின்னணி தகவல்கள் ஏன் மீடியா வெளிச்சத்திறகு பெரிதாக வரவில்லை?
சாதாரண நகை காணாமல் போன விஷயத்திற்கு ஒரு இளைஞரை கடும் சித்ரவதை செய்து கொல்லும் அளவிற்கு போனது ஏன்? பின்னணி என்ன? உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு பல லட்சம் உதவி, அரசு வேலை, சிபிஐ விசாரணை என்பதெல்லாம் சரியா என விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.