கல்குவாரி பயங்கர விபத்து; உடல் சிதறி 4 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி FIR தகவல்!
கல்குவாரி வெடி விபத்துக்கு என்ன காரணம் என்று எப்.ஐ ஆர் இல் தகவல் வெளியானது.
கல்குவாரி விபத்து
விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த இருந்த வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் திடீரென வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின.இதில் அந்த கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் சிக்கிய 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
FIR தகவல்
இது தொடர்பான காட்சிகள் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், வெடிவிபத்து உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இதை தொடர்ந்து விபத்து நடந்த குவாரியின் அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்கான காரணம் பற்றி எப்.ஐ.ஆர் இல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில், டெட்டனேட்டர்,நைட்ரஜன் வெடி மருந்துகள் கொண்ட வண்டிகளை அருகருகே வைத்து குடோனுக்குள் வெடி மருந்துகளை இறக்கியாதே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி மருந்துகளை தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். இவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தும் இப்படி கையாண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.