கல்குவாரி வெடி விபத்து; பலியானவர்கள் வாரிசுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கல்குவாரி விபத்து
விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த இருந்த வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் திடீரென வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின.இதில் அந்த கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் சிக்கிய 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
மு.க.ஸ்டாலின்
இது தொடர்பான காட்சிகள் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில்,
அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு
எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.