காஞ்சிபுரத்தில் கல்குவாரி விபத்து -காணாமல்போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!
காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி நேற்று மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களுடன் கனரக லாரி உள்ளிட்ட வாகனங்களும் மண் மற்றும் பாறைகளின் இடுக்கில் சிக்கியது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாறைகளை அகற்றும் பணிகளை தீவிரமாக ஈடுபட்டனர். இதில் மணிகண்டன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அத்துடன் சோனா அன்சாரி மற்றும் சுரேஷ் ஆகியஇருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன 8 பேரை மீட்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த பணியானது தற்போது மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலமையில் நடந்து வருகிறது .
கல்குவாரியில் பாறைகள் விழுந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில்,பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.