என்னவென்னாலும் நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்.... மைதானத்தில் நடனமாடிய விராட் கோலி...
டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் மாதங்களில் நடக்க இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்திருந்தார்.
கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாகவே சதம் அடிக்க முடியாமல் தவித்து வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கோலி அவரது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் வெளியானது. இந்தப் பட ஸ்டைலில், மைதானத்தில் பயிற்சியின்போது கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடனமாடுகிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
It's Kohli's 4th time???#PushpaTheRule @AlluArjun pic.twitter.com/voKZXDraJf
— Allu Arjun TFC™ (@AlluArjunTFC) July 1, 2022
தங்கம் விலை கிடு கிடு உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி..!