விராட் கோலிக்கு கொரோனா தொற்று? - ஷாக்கான ரசிகர்கள்

Virat Kohli
6 நாட்கள் முன்

விராட் கோலி

கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்ப காலங்களில் சற்று தடுமாறினாலும் பின்னர் எதிரணியினரை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக கிட்டதட்ட சச்சினுக்கு பின் அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதனால் விராட் கோலி ரசிகர்களால் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்ற கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்தார்.

முதல்முறையாக காட்டப்பட்ட வாமிகா

இந்திய நட்சத்திர வீரரான விராட்கோலி, அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய மகள் பிறந்த நிலையில், வாமிகா என பெயரிட்டனர். சமீபத்தில் தென்னாப்பிரிக்கா தொடரில் முதன் முறையாக இந்திய அணி விளையாடுகையில், கோலியின் அரைசதம் காட்டியபோது, மகளுடன் அனுஷ்கா சர்மா கைதட்டி வரவேற்றார். அதற்கு, கோலியும், தனது குழந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் தாலாட்டு சைகை செய்தார். அப்போது தான் வாமிகாவின் முகத்தை ரசிகர்கள் முதன்முதலாக பார்த்தனர். அப்போது, அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

விராட் கோலிக்கு கொரோனா தொற்று? - ஷாக்கான ரசிகர்கள் | Virat Kohli Corona

அனுஷ்கா சர்மா கர்ப்பமா?

சமீபத்தில் அனுஷ்கா ஷர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது. சமீபத்தில் அனுஷ்கா, விராட் கோலி இருவரும் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக கூறியதாக தகவல் வெளியானது.

விராட் கோலிக்கு கொரோனா தொற்று? - ஷாக்கான ரசிகர்கள் | Virat Kohli Corona

விராட் கோலிக்கு கொரோனா?

மாலத்தீவில் விடுமுறையை முடித்துவிட்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல வீரர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.    

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.