தோனிக்கும், எனக்கும் இது கடைசி போட்டி? மறக்கவே முடியாது - குண்டை தூக்கிப்போட்ட கோலி!
தோனியும், தானும் விளையாடுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை - பெங்களூரு
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணியை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதனிடையே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த வருடத்துடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்து ரசிகர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர்.
கடைசி முறை
இந்நிலையில் தோனியும், தானும் விளையாடுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது "தோனி இந்தியாவின் எந்த மைதானத்திலும் விளையாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு பெரிய விஷயமாகும்.
யாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம். எனவே இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். நாங்கள் மகத்தான நினைவுகளை கொண்டுள்ளோம். இந்தியாவுக்காக சில அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். எனவே இப்போட்டியில் எங்களை ஒன்றாக பார்ப்பது ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
அவர் பலமுறை வெற்றிகரமாக போட்டியை பினிஷிங் செய்துள்ளார். எனக்கு அது மறக்க முடியாத நினைவாகும். கடைசி வரை நின்றால் நம்மால் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது தோனிக்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.