பிளாங்க் செக்குடன் காவ்யா மாறன் - ஹைதராபாத் அணி கேப்டனாகும் ரோஹித் ஷர்மா?

Rohit Sharma Mumbai Indians Sunrisers Hyderabad Cricket IPL 2024
By Jiyath Apr 06, 2024 09:19 AM GMT
Report

ரோஹித் ஷர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் ஷர்மா 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் சாதாரண வீரராக அவர் விளையாடி வருகிறார்.

பிளாங்க் செக்குடன் காவ்யா மாறன் - ஹைதராபாத் அணி கேப்டனாகும் ரோஹித் ஷர்மா? | Rohit Sharma To Captain Sunrisers Hyderabad Ipl

தற்போது மும்பை அணியின் கேப்டனாக குஜராத் அணியிலிருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. ரோஹித் மற்றும் பாண்டியா இடையில் ஒவ்வொரு போட்டியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறதும்.

மேலும், இதன் பேரில் இவர்களின் ரசிகர்களும் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையே ரோஹித் ஷர்மா மும்பை அணியிலிருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.

IPL 2024: சவாலாக இருக்கும்.. இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - பிரபல வீரர் கணிப்பு!

IPL 2024: சவாலாக இருக்கும்.. இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - பிரபல வீரர் கணிப்பு!

ஐதராபாத் அணி 

மேலும், 2025 ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அல்லது பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிளாங்க் செக்குடன் காவ்யா மாறன் - ஹைதராபாத் அணி கேப்டனாகும் ரோஹித் ஷர்மா? | Rohit Sharma To Captain Sunrisers Hyderabad Ipl

ஐதராபாத் அணியில் இணைவதற்கான அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகள் ஐதராபாத் அணியின் கேப்டனாக அவர் செயல்படுவார்.

அதற்கான ஒப்பந்த தொகையை அவரே தெரிவிக்க ஏதுவாக ரோஹித் ஷர்மாவுக்கு பிளாங்க் செக் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.