பாண்டியாவை நோகடித்த ரசிகர்கள்; ஆதரவாக ரோஹித் ஷர்மா செய்த செயல் - வைரலாகும் Video!
ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோஹித் ஷர்மா செய்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை - ராஜஸ்தான்
ஐபிஎல் 2024 தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 126 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வி கண்டுள்ளது.
கடந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் சாதாரண வீரராக அவர் விளையாடி வருகிறார். தற்போது மும்பை அணியின் கேப்டனாக குஜராத் அணியிலிருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.
நெகிழ்ச்சி செயல்
ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன்ஷிப் பதவியை பறித்து பாண்ட்யாவிடம் கொடுத்தது ரசிகர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் மும்பை அணி விளையாடும் போட்டிகளில், பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.
Rohit Sharma in support of Hardik Pandya - asked fans to stop booing him.
— Cric Point (@RealCricPoint) April 1, 2024
- My respect for Rohit increases every single day. ❤️? pic.twitter.com/aLU8C7hU3X
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமாக கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோஹித் ஷர்மா, ரசிகர்களை பார்த்து பாண்ட்யாவுக்கு எதிராக சத்தமிடாதீர்கள் என கையசைத்து கோரிக்கை வைத்தார்.
ரசிகர்கள் அமைதியாகும் வரை 2, 3 முறை கையசைத்து கோரிக்கை வைத்த ரோஹித் ஷர்மாவின் செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma asking crowd not to boo Hardik Pandya.
— Zulfiqar Aliⁱᴾⁱᵃⁿ (@zulfiqarali7034) April 2, 2024
Indian Cricket has really produce some gentlemen like Sachin Tendulkar, Ms Dhoni and Rohit Sharma.
Respect from Pakistan ??#MIvsRR#RRvMI#RohitSharma#HardikPandya#MIvsRR pic.twitter.com/q6Uqw8NBZA