தோனி 8-வது இடத்தில் பேட்டிங் செய்வது ஏன் தெரியுமா? இப்படி ஒரு காரணமா!
எம்.எஸ்.தோனி 8-வது இடத்தில் களமிறங்குவதை குறித்து சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 கடந்த 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
ஆனாலும், இதுவரை எம்.எஸ். தோனி பேட்டிங் செய்வதை பார்க்க முடியாதது, சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது. இளம் வீரர்களுக்கு முன்கூட்டியே களமிறங்கும் வாய்ப்பை கொடுக்கும் அவர், 8-வது இடத்தில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில் தோனி 8-வது இடத்தில் களமிறங்குவதை பற்றி பேசிய சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி "கண்டிப்பாக இது பிளமிங் வழிகாட்டுதலின் படி நடக்கிறது. இம்பேக்ட் வீரர் விதிமுறை வந்துள்ளதால் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் கிடைக்கின்றனர்.
பைத்தியக்காரத்தனம்
எனவே பேட்டிங் வரிசை நீள்கிறது. அதனால் எம்எஸ் தோனியை 8-வது இடத்தில் நாங்கள் பெற்றுள்ளது பைத்தியக்காரத்தனமானது. தற்போது தோனி நன்றாக பேட்டிங் செய்கிறார். இருப்பினும் எங்களுடைய அணியில் ஆழமான திறமை இருக்கிறது.
அதனால் உயர் வரிசையில் விளையாடும் வீரர்கள் இரு மனதுடன் இருந்தால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நேர்மையான பாதையில் செல்ல வேண்டும். அவர்கள் நிச்சயமாக பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டனின் ஆதரவை பெற்று முடிந்த வரை ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதை விரும்புகிறோம்.
அதனால் நீங்கள் அவுட்டானாலும் பரவாயில்லை. அதற்காக நீங்கள் விமர்சிக்கப்பட மாட்டீர்கள். பொதுவாக பிளம்மிங் வேகமாக விளையாடுவதை பற்றி பேசுவார். எனவே நாங்கள் வேகமாக விளையாட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.