சாதிக்க வயது தடையல்ல.. 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள் - CSK வீரர் சாதனை!

Chennai Super Kings Cricket South Africa National Cricket Team Sports
By Jiyath Feb 14, 2024 07:13 AM GMT
Report

டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 4-வது பவுலர் என்ற சாதனையை இம்ரான் தாஹிர் படைத்துள்ளார்

இம்ரான் தாஹிர் 

வங்கதேசத்ததில் 'வங்கதேச பிரிமீயர் லீக்' தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் விளையாடுகிறார்.

சாதிக்க வயது தடையல்ல.. 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள் - CSK வீரர் சாதனை! | Imran Tahir 500 Wickets In T20 Cricket History

இந்நிலையில் ரங்பூர் ரைடர்ஸ்-குல்னா டைகர்ஸ் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரங்பூர் ரைடர்ஸ் அணி வீரர் இம்ரான் தாஹீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 4-வது பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சயின்ஸ் புக்கில் என்ன இருக்கு தெரியுமா? அதுகுறித்து கேலி செய்த நபருக்கு பும்ரா மனைவி பதிலடி!

சயின்ஸ் புக்கில் என்ன இருக்கு தெரியுமா? அதுகுறித்து கேலி செய்த நபருக்கு பும்ரா மனைவி பதிலடி!

சாதனை 

44 வயதான இம்ரான் தாஹிர் வயது காரணமாக விவாதப் பொருளாகவே இருந்து வந்த நிலையில், இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் டுவைன் பிராவோ (624 விக்கெட்) முதலிடத்திலும், ரஷித் கான் (556) இரண்டாம் இடத்திலும், சுனில் நரைன் (532) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

சாதிக்க வயது தடையல்ல.. 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள் - CSK வீரர் சாதனை! | Imran Tahir 500 Wickets In T20 Cricket History

தற்போது நான்காம் இடத்தை இம்ரான் தாஹிர் பிடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இம்ரான் தாஹிர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.