சயின்ஸ் புக்கில் என்ன இருக்கு தெரியுமா? அதுகுறித்து கேலி செய்த நபருக்கு பும்ரா மனைவி பதிலடி!

Jasprit Bumrah Cricket Indian Cricket Team Sports
By Jiyath Feb 13, 2024 12:07 PM GMT
Report

தன்னை உருவ கேலி செய்த நபருக்கு இந்திய வீரர் பும்ராவின் மனைவி பதிலடி கொடுத்துள்ளார் 

பும்ரா-சஞ்சனா

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பவுலர்களில் ஒருவராக இருப்பவர் ஜாஸ்பிரித் பும்ரா. இதுவரை இந்திய அணிக்காக 165 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 323 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சயின்ஸ் புக்கில் என்ன இருக்கு தெரியுமா? அதுகுறித்து கேலி செய்த நபருக்கு பும்ரா மனைவி பதிலடி! | Bumrah S Wife Sanjana Gives Reply To Body Shaming

பும்ரா கடந்த 2021-ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

CSK அணியுடன் இணையும் பிரபல நடிகை - அப்போ கண்டிப்பாக அதை எதிர்பார்க்கலாம்!

CSK அணியுடன் இணையும் பிரபல நடிகை - அப்போ கண்டிப்பாக அதை எதிர்பார்க்கலாம்!

தக்க பதிலடி 

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதி விளம்பர வீடியோ ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். அதில் இணையவாசி ஒருவர் சஞ்சனாவின் உடல் எடையை குறிப்பிட்டு உருவ கேலி செய்திருந்தார்.

சயின்ஸ் புக்கில் என்ன இருக்கு தெரியுமா? அதுகுறித்து கேலி செய்த நபருக்கு பும்ரா மனைவி பதிலடி! | Bumrah S Wife Sanjana Gives Reply To Body Shaming

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் பாடப்புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் பெண்களின் உடல் வடிவம் பற்றி இங்கு பேசுகிறாய். அமைதியாக இங்கிருந்து சென்றுவிடு" என்று அந்த பதிவுக்கு கீழ் சஞ்சனா பதில் அளித்துள்ளார்.