கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு? இந்தியாவை விட்டு வெளியேறும் விராட் கோலி - அதிர்ச்சி தகவல்!
கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. இந்திய அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் சர்வேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார்.
தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். இந்த நிலையில் 2அல்லது3 ஆண்டுகளுக்குச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி
மேலும் ஓய்வுக்கு பிறகு தனது மனைவி, குழந்தைகளுடன் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அனுஷ்கா சர்மாவும் விராட் கோலி இணைந்து லண்டனில் சில தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் அங்கு சில சொத்துக்களையும் வாங்கியிருப்பதாக விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். இதன் மூலம் விராட் கோலி தனது ஓய்வுக்குப் பிறகு லண்டனுக்குக் குடிபெயர்வது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.