ரோகித் சர்மாவிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு -விராட் கோலி சொன்ன அதிர்ச்சி தகவல்!
ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித் சர்மாவின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோகித் சர்மா
மகாராஷ்டிர மாநிலத்தின், நாக்பூரில் 1987ஆம் ஆண்டு பன்சோத் என்ற ஊரில் ரோஹித் சர்மா பிறந்தார். இவரது பெற்றோர் குருநாத் சர்மா - பூர்ணிமா சர்மா ஆவர். இவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த காரணத்தால் ரோஹித் சர்மா தனது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
அப்போது தனது மாமாவின் உதவியுடன் கிரிக்கெட் பயிற்சி கிளப்பில் இணைந்தார்.இது தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு, 2006ஆம் ஆண்டு முதன் முதலாக நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடினார்.
அன்று முதல் பல்வேறு டெஸ்ட் போட்டி முதல் சர்வதேச போட்டிகள் வரை விளையாடி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத தான் ரோஹித் சர்மா இடம்பிடித்திருக்கிறார். தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
சுவாரஸ்ய தகவல்
இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மற்றும் தெலுங்கில் என ரோகித் சர்மாவுக்கு மொத்தம் 4 மொழிகளில் சரளமாகப் பேசத் தெரியுமாம். ரோகித் சர்மாவுக்கு முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக் என்றால் நிறையப் பிடிக்குமாம்.
பள்ளிக் கூடத்திற்குச் செல்லாமல் கட் அடித்துவிட்டு ஷேவாக்கைச் விளையாடும் கிரிக்கெட் மேச்சை பார்க்கச் சென்று விடுவாரம். மேலும் ரோகித் சர்மாவிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது- தனது உடைமைகளை அவ்வப்போது மறந்துவிடுவது தான்.
இது குறித்து நிகழ்ச்சியொன்றில் ரோகித் சர்மாவைப் பற்றி விராட் கோலி பேசியிருப்பார். அதில்ரோகித் சர்மா தனது பாஸ்போர்ட்டையே ஒரு முறை மறந்ததாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.