10 ஆண்டுகள் ஆச்சு.. விராட் இதை சாப்பிட்டது கிடையாது - ரகசியத்தை சொன்ன அனுஷ்கா!
விராட் கோலியின் உணவுப் பழக்கம் குறித்து அவரது மனைவி அனுஷ்கா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. இவர் ஒரு நாள் தொடர் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பவர் 5ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.
அதன் பிறகு 20 ஆண்டுகளில் 2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று தற்போது வரையில் விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் இன்றளவும் விராட் கோலி நம்பர் ஒன் வீரராக இருப்பதற்கு அவருடைய உணவுப் பழக்கமும் உடல் தகுதியும் தான் முக்கிய காரணம்.
இந்த நிலையில் விராட் கோலியின் உணவுப் பழக்கம் குறித்து அவரது மனைவி அனுஷ்கா பேசியுள்ளார். அதில் விராட் கோலி காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வார். அதன்பிறகு என்னுடன் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வார். அதுமட்டுமில்லாது விராட் கோலி போன்று யாராலும் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடாக இருக்க முடியாது.
உணவுப் பழக்கம்
கூல்ட்ரிங்க் , இனிப்பு போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் பட்டர் சிக்கன் சாப்பிட்டது கூட கிடையாது மேலும் தூக்கத்தை மட்டும் தான் நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று விராட் கோலி என்னிடம் எப்போதும் சொல்வார்.
இது போன்ற பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து செய்வதால் தான் இன்று அவர் உலகின் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல் மற்ற நபர்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும் நபராக இருப்பதாக என்று அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.