கோபத்தின் உச்சம்.. பேட்டால் அடித்த விராட் கோலி - வைரல் வீடியோ!
விராட் கோலி ஆத்திரத்தில் கூல்ட்ரிங்ஸ் பெட்டியைப் பேட்டால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விராட் கோலி
புனேவில், இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி ,நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது. முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆன நிலையில், 2-வது இன்னிங்ஸில் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.
2-வது இன்னிங்ஸில் விராட் கோலி 40 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தபோது சான்ட்னர் வீசிய பந்து விராட் கோலியின் காலில் பட்டு எல்.பி.டபிள்யூ ஆனது.இதனை ஏற்று அம்பையர் விராட் கோலிக்கு அவுட் கொடுத்தார்.
வீடியோ
இதனால் விரக்தி அடைந்த விராட் கோலி மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது அவர் செல்லும் வழியிலிருந்த கூல்ட்ரிங்ஸ் பெட்டியைத் ஆத்திரத்தில் தனது பேட்டால் ஓங்கி அடித்தார்.
தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.