கம்பீர் சொல்றதுக்கு ரோஹித் தலையாட்டக் கூடாது; அது தப்பு - சஞ்சய் விளாசல்!
ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் கவனமாக செயல்பட வேண்டும் என சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி அதற்குப் பிறகு புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு காரணம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர், “இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
180 ரன்களாவது குவித்து இருந்தால் அந்த ஆட்டம் வேறு விதமாக மாறி இருக்கும். ஆனால் நான் இந்த விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். சர்ப்ராஸ்கானை பேட்டிங் ஆர்டரில் கீழே இறக்கிவிட்டு இடது கை ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தரை மேலே அனுப்பியது திருப்திகரமாக அமையவில்லை.
சஞ்சய் விமர்சனம்
அது போன்ற விஷயங்கள் நடைபெறக் கூடாது. இது விசித்திரமாக உள்ளது ரோகித் சர்மா கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது ஒன்றுதான். இது ஒரு டி20 வகையிலான சிந்தனை. நீங்கள் வீரர்களின் ஒட்டுமொத்த தரத்திற்கு தகுந்தவாறு செல்ல வேண்டும். ஒரு அணியில் பயிற்சியாளருக்கு குறைந்த பட்ச செல்வாக்குதான் உள்ளது என்று கூறுவேன்.
அவர் மைதானத்தில் கால் பதிக்கவில்லை கேப்டனே அங்கு பொறுப்பேற்கிறார். ஆனால் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ததற்கு கம்பீரை பாராட்ட வேண்டும்.
சர்பராஸ் கான் அல்லது நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை மேலே அனுப்பும் நடவடிக்கை இன்னும் சரியாக அமையும். ஆனால் கௌதம் கம்பீர் மீது எந்தவிதமான பொறுப்பையும் வைப்பது நியாயமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.